நடிகர் மோகன்லால் நடித்த ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதியை அறிவித்து இருக்கின்றனர்.
லிஜோ ஜோஸ் பெல்லிசரி இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவான ‘மலைக்கோட்டை வாலிபன்’ திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனால், இப்படம் வசூல் ரீதியான வெற்றியைத் தவறவிட்டது.
இந்நிலையில், மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் இன்று ‘டிஸ்னி ஹாட்ஸ்டார்’ ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் வெளியாகிறது.

