தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘ராயன்’ படத்திலிருந்து எஸ்.ஜே.சூர்யாவின் படத்தை வெளியிட்டிருக்கின்றனர்

1 mins read
3fb69cd8-9960-4044-a1c0-3781045e96e2
எஸ்.ஜே.சூர்யா. - படம்: ஊடகம்

தனுஷுடன் ‘ராயன்’ படத்தில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் கறுப்பு வெள்ளை சுவரொட்டியை படக்குழுவினர் வெளியிட்டிருக்கின்றனர்.

நடிகர் தனுஷ் படங்களில் நடிப்பது மட்டுமின்றி படங்களை இயக்கியும் வருகிறார். தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50வது படத்தின் முதல் சுவரொட்டி அண்மையில் வெளியானது. அத்துடன் அந்தப் படத்தின் பெயரையும் வெளியிட்டிருந்தனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியது. ‘ராயன்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்