ஹிப் ஹாப் ஆதி: என் கனவுப் படத்தை முடித்திருக்கிறேன்

1 mins read
5822e1fb-ddb0-444f-aa62-5f880674f569
ஹிப் ஹாப் ஆதி. - படம்: ஊடகம்

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்திருக்கும் ‘பி.டி.சார்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக அறிவித்து இருக்கிறார்.

நடிகரும் இயக்குநரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் தமிழா ஆதி நேற்று முன்தினம் அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“சென்ற ஆண்டு என்னுடைய பிறந்தநாள் அன்று இந்தப் படத்தைத் தொடங்கினோம். அதிர்ஷ்டவசமாக இந்த ஆண்டு என்னுடைய பிறந்தநாள் அன்று படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று அந்தக் காணொளியில் பேசி இருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி.

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் வேணுகோபாலன், ‘பி.டி.சார்’ என்ற இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறது.

படம் விளையாட்டு ஆசிரியரின் வாழ்வியலைப் பேசுகிறதாம். முன்னதாக ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான ‘வீரன்’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது

குறிப்புச் சொற்கள்