அனுஷ்காவின் 50வது படத்தை 15 ஆண்டிற்குப் பிறகு இயக்கும் கிரிஷ்

அனுஷ்காவின் 50வது படத்தை 15 ஆண்டிற்குப் பிறகு இயக்கும் கிரிஷ்

1 mins read
340b4f69-0375-4bd7-abd6-f65265ef9663
அனுஷ்கா. - படம்: ஊடகம்

அனுஷ்கா தன்னை வைத்து 15 ஆண்டுகளுக்கு முன் ‘வேதம்’ என்ற படத்தை இயக்கிய கிரிஷ் இயக்கத்தில் மீண்டும் தனது 50வது படத்தில் நடிக்க இருக்கிறார்.

அண்மையில் அனுஷ்கா நடித்த ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ திரைப்படம் அனுஷ்காவிற்கு ஓரளவு வெற்றிப் படமாக அமைந்த நிலையில் அனுஷ்காவின் இந்த ஐம்பதாவது படம் முழுவதும் கதாநாயகியை மையப்படுத்திய படமாக உருவாக இருக்கிறது.

இந்தப் படத்தை பிரபல இயக்குநர் கிரிஷ் ஜகர்லமுடி இயக்குகிறார். கடந்த 2010ல் அனுஷ்காவின் திறமையான நடிப்பை வெளிக்காட்டும் விதமாக ‘வேதம்’ என்ற படத்தை இயக்கிய இவர் மீண்டும் 15 ஆண்டுகள் கழித்து அனுஷ்காவின் ஐம்பதாவது படத்தை இயக்குவதற்காக அவருடன் இணைந்துள்ளார். ‘ஷீலாவதி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஒடிசாவில் நடைபெற்று வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கிரிஷ் ஜகர்லமுடி இயக்குநர் பவன் கல்யாணை வைத்து ‘ஹரிஹர வீர மல்லு’ என்ற படத்தை இயக்கி வந்தார். இடையிடையே படப்பிடிப்பு தள்ளிப்போனதால் இவர் தற்பொழுது அனுஷ்காவின் படத்தை இயக்கத் துவங்கியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்