அறிவாற்றலைப் பயன்படுத்தி மகளுக்காக பழிவாங்கும் தந்தை

அறிவாற்றலைப் பயன்படுத்தி மகளுக்காக பழிவாங்கும் தந்தை

1 mins read
45c4b550-22dc-4f22-a444-cf3f906a452e
‘அக்கரன்’ படத்தில் எம்.எஸ்.பாஸ்கர். - படம்: ஊடகம்

குணச்சித்திர நடிகராக ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள நடிகர்களில் ஒருவர் எம்.எஸ்.பாஸ்கர்.

இவர் கதைநாயகனாக நடித்துள்ள படம் ‘அக்கரன்’. இப்படம் திரைகாண்கிறது.

இதில் ‘பள்ளிப் பருவத்திலே’ வெண்பா, பிரியதர்ஷினி ஆகிய இருவரும் இவரது மகள்களாக நடித்துள்ளனர்.

மேலும் ‘கபாலி’ ரிஷ்வந்த், நமோ நாராயணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். அருண் பிரசாத் இயக்கியுள்ளார்.

‘அக்கரன்’ என்றால் நிலையானவன், அழிக்க முடியாதவன், எங்கும் நிறைந்தவன், கடவுள் எனப் பல்வேறு அர்த்தங்கள் உள்ளனவாம். கதைப்படி, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த விவசாயியான எம்.எஸ்.பாஸ்கரின் இரு மகள்களில் ஒருவர் படிக்கிறார், மற்றொருவர் வீட்டில் இருக்கிறார்.

இந்நிலையில், ஒரு மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இதை மூடி மறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

உடல் பலத்தால் அவர்களை எதிர்க்க முடியாத எம்.எஸ்.பாஸ்கர், தனது அறிவாற்றலைப் பயன்படுத்தி எவ்வாறு பழிவாங்குகிறார் என்பதை விறுவிறுப்பாக விவரித்திருக்கிறோம் என்கிறார் இயக்குநர் அருண்.கே.பிரசாத்.

குற்றவாளிகளைப் பழி வாங்கிய பிறகு அதில் இருந்து எம்.எஸ்.பாஸ்கர் எவ்வாறு தப்பிக்கிறார் என்பதையும் மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தி உள்ளனராம். வரும் மார்ச் மாதம் இந்தப்படம் திரைகாண உள்ளதாகத் தகவல்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்