கலைக்கும் காதலுக்கும் நன்றி: நயன்தாரா

கலைக்கும் காதலுக்கும் நன்றி: நயன்தாரா

1 mins read
7771bd23-b2f7-4594-81d7-27ad3d8ab107
நயன்தாரா. - படம்: ஊடகம்

தாதா சாகேப் பால்கே விருதைப் பெற்றுள்ள நயன்தாரா, ரசிகர்களுக்கும் திரைத்துறையினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள காணொளியில், ‘கலைக்கும் காதலுக்கும் நன்றி’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

“என்றும் என்னுடன் இருக்கும் ‘உயிர்க்கும்’ ‘உலகிற்கும்’, என்னுடைய எல்லாமுமான விக்கிக்கும் (கணவர்) ஓராயிரம் கோடி ’லவ் யூ’, அன்புக்கும் ஆண்டவனுக்கும் நன்றி,” என்று காணொளியில் மேலும் தெரிவித்துள்ளார் நயன்தாரா.

‘ஜவான்’ இந்திப் படத்தில் சிறப்பாக நடித்திருப்பதற்காக அப்படத்தின் நாயகன் ஷாருக்கானுக்கும் நயன்தாராவிற்கும் விருது கிடைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்