‘டான்’ படத்தின் மூன்றாம் பாகத்தில் கியாரா அத்வானி

‘டான்’ படத்தின் மூன்றாம் பாகத்தில் கியாரா அத்வானி

1 mins read
3da0e67b-2924-4d8d-b087-f2f9c233c5d7
கியாரா அத்வானி. - படம்: ஊடகம்

கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்ற ‘டான்’ இந்திப் படத்தின் மூன்றாம் பாகம் உருவாகிறது. இதில் ரன்வீர் சிங் நாயகனாகவும் கியாரா அத்வானி நாயகியாகவும் நடிக்க உள்ளனர்.

இப்படத்துக்கு கால்ஷீட் ஒதுக்குவதில் கியாராவுக்கு தயக்கம் இருந்ததாம். எனினும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் ‘டான் 3’ படத்தை உருவாக்க இருப்பதை அறிந்ததும் அவரது தயக்கம் விலகியதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தில் நடிக்க பெருந் தொகையை ஊதியமாகப் பெற்றுள்ளார் கியாரா. படத்துக்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கி உள்ளன.

குறிப்புச் சொற்கள்