விருது பெறும் பாலா; பாராட்டிய ரோபோ சங்கர்

1 mins read
e4872c6e-6ad9-4acb-92ab-f2b52ba9d971
ரோபோ சங்கர். - படம்: ஊடகம்

கலைஞர்கள் மீது அதிகமான அன்பு காட்டி பேராதரவு வழங்கக் கூடியவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்று நடிகர் ரோபோ சங்கர் கூறியுள்ளார்.

15வது அனைத்துலக நார்வே தமிழ்த் திரைப்பட விழா, விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட படங்கள் குறித்த அறிவிப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

இதில் பேசிய ரோபோ சங்கர், இதுபோன்ற விழாக்கள் தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கும் என்றார்.

“கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான தம்பி பாலா, விஜயகாந்த் பெயரில் வழங்கப்படும் விருதுக்குத் தேர்வாகி உள்ளார். இந்த விருதுக்கு அவர் முற்றிலும் தகுதி பெற்றவர்,” என்றார் ரோபோ சங்கர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்