‘உடற்பயிற்சிக் கூடமே வீடாக மாறிவிட்டது’

‘ரங்கூன்’ படத்தை அடுத்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதுப்படம் ‘அமரன்’.

இதில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிப்பதும் மறைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கைதான் திரைப்படமாகிறது என்பதும் தமிழகத்தின் கடைக்கோடி கிராமம் வரை பரவிவிட்டது.

ராணுவ மேஜர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயன் கடும் உடற்பயிற்சியில் ஈடுபட்டதாகச் சொல்கிறார் இயக்குநர். படப்பிடிப்பு தொடங்குவதற்கு ஆறு மாதங்கள் இருந்தபோதே உடற்பயிற்சி நிபுணர் ஒருவரை நியமித்து, சிவாவை தயார்ப்படுத்தி உள்ளனர்.

“ராணுவ மேஜர் கதாபாத்திரம் என்பதால் சிவாவை மிடுக்கான தோற்றத்துக்கு மாற்ற வேண்டியிருந்தது. பொதுவாக அவர் மென்மையாகப் பேசுவார். அவர் வளரும்போதே, பணிவும் சேர்ந்து வளர்ந்துவிட்டது.

“மும்பையில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றார். குறுகிய காலத்தில் அவர் மொத்தமாக உருமாறி என் முன்னர் வந்து நின்றபோது அசந்து போனேன்.

“இதுவரை அமரன் படத்துக்கான ஒரு தோற்றத்தில் மட்டுமே சிவாவைப் பார்த்திருக்கிறீர்கள். மேலும் பல தோற்றங்களில் அவரைத் திரையில் பார்க்க முடியும். உடற்பயிற்சிக் கூடம்தான் தன் வீடு என்று நினைக்கும் அளவுக்கு கடுமையாகப் பயிற்சி செய்தார். அவருடைய உழைப்பு திரையிலும் பிரதிபலிக்கும்,” என்று உற்சாகத்துடன் பேசுகிறார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.

படத்தின் தலைப்பு குறித்து?

“இதைவிடப் பொருத்தமான தலைப்பு கிடைக்க வாய்ப்பில்லை. ‘அமர்’ என்றால் போர் என்று அர்த்தம். ‘அமரன்’ என்றால் போர் புரியும் வீரன் என்று குறிப்பிடலாம். அழிவில்லாதவன் என்றும் அர்த்தம் கொள்ளலாம்.

“டெல்லியில் அமர்ஜவான் ஜோதி என்று ராணுவ வீரர்களின் தியாகத்தைப் போற்றும் அணையா விளக்கு எரியும் இடம் உள்ளது. அதனால், எல்லா மொழிக்கும் பொதுவான ஒரு பெயராவும் இருக்கிறது.

“இதே தலைப்பில் மூத்த நடிகர் கார்த்திக்கும் ஒரு படத்தை தயாரித்து இயக்கி உள்ளார். நடிகர் கௌதம் கார்த்திக் மூலம் கார்த்திக்கிடம் பேசி, தலைப்புக்கான உரிமையைப் பெற்றோம்,” என்கிறார் ராஜ்குமார் பெரியசாமி.

சாய்பல்லவிக்கு சவாலான கதாபாத்திரம் அமைந்துள்ளதாம். மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவியாக நடித்துள்ளார்.

“சாய் பல்லவி படப்பிடிப்புக்கு வரும்போது அவர் முன்கூட்டியே தன்னை தயார்ப்படுத்திக் கொண்டுள்ளாரா என்பதை யூகிக்க இயலாது. ஆனால், கதையையும் காட்சிகளையும் நன்கு உள்வாங்கி இருப்பார்.

“ஒரே நாளில் அவரை வைத்து ஐந்தாறு காட்சிகளைக்கூட படமாக்கி விடலாம். அவரும் சிவாவும் இணைந்து நடிக்கும் சில காட்சிகளை இன்னும் படமாக்கவில்லை.

ராணுவம் என்றாலும் அனைத்து மாநிலங்களில் இருந்து வீரர்கள் இருப்பார்கள். எனவே பல்வேறு மொழிகளிலிருந்து துணை நடிகர், நடிகையரை நடிக்க வைத்துள்ளோம். அந்த வகையில் காஷ்மீர் வீரர்களும் நடித்துள்ளனர்.

“கமல் சார் நடித்த `விஸ்வரூபம்’ படத்தின் வில்லன் ராகுல் போஸ் இதில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.

சிவாவின் நண்பராக புவன் அரோரா நடிச்சிருக்கார். இசை ஜி.வி.பிரகாஷ். மனம் சோர்வாக இருக்கும்போது ஜி.வி.யை சந்தித்தால் போதும். எல்லா சோகமும் சோர்வும் பறந் தோடிவிடும் என்பது உறுதி. அந்த அளவுக்கு தன்னம்பிக்கையுடன் பேசிய நம்மை உற்சாகப்பபடுத்துவார். ராணுவம் சார்ந்த கதையில் சில மென்மையான பாடல் களைத் தந்துள்ளார்,” என்றார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.

இப்படத்துக்கான பணிகளைத் தொடங்கும் முன்பே ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தாரை தொடர்புகொண்டு பேசினாராம்.

“வெளிநாட்டில் இருந்த முகுந்த் மனைவி இந்துவிடம் பேசினேன். அவருடைய மன வலிமை, மன உறுதி பிரமிக்க வைத்தது.

“இந்தப் படத்துக்கான உரிமம் என்னவோ, அதற்கு அவருடைய ஒப்புதல் எப்போதும் இருக்கும் என்றும் நல்ல படைப்பாக உருவாக்க வேண்டும் என்றும் கூறினார்.

“படத்தின் பூசைக்கு வந்திருந்து அவரது கையால் குத்து விளக்கை ஏற்றியது நெகிழ்வான தருணமாக இருந்தது. படத்தின் குறுமுன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியானதும் முகுந்த் மகன் படம் வெற்றிபெற வாழ்த்து கூறி கைப்பேசியில் தகவல் அனுப்பியிருந்தார். அதைப் பார்த்தபோது ஏற்பட்ட உற்சாகத்தை விவரிக்க இயலாது,” என்கிறார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.

இந்தப் படம் சிவாவின் ரசிகர்களுக்கும் பெரும் உற்சாகம் அளிக்கும் என்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!