வேர்களை நெருங்கி உள்ளேன்: ஜான்வி

வேர்களை நெருங்கி உள்ளேன்: ஜான்வி

1 mins read
c1977144-aaef-4d8c-b51c-757a84067c41
ஜான்வி கபூர். - படம்: ஊடகம்

தென்னிந்திய படங்களில் நடிப்பதன் மூலம் தனது வேர்களை நெருங்கி உள்ளதாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கூறியுள்ளார்.

தற்போது ஜூனியர் என்டிஆர் ஜோடியாக ‘தேவாரா’ படத்தில் நடித்துள்ளார் இவர்.

“இந்தப் படத்தில் நானும் இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது தெலுங்கில் பேசக் கற்று வருகிறேன்.

“இந்தியாவில் திரைப்படங்களும் கிரிக்கெட் விளையாட்டும்தான் எனக்குப் பிடித்தமானவை. விராத் கோலி, தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும்தான் பிடித்தமான கிரிக்கெட் வீரர்கள்,” என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் ஜான்வி கபூர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்