குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் உருவாகும் ‘மங்கை’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார் ‘கயல்’ ஆனந்தி.
‘கயல்’ வெளியாகி 10 ஆண்டுகள் கழித்து ‘மங்கை’ படம் வெளியாகிறது என்றும் ‘மங்கை’ தன் மனதுக்கு நெருக்கமான படைப்பு என்றும் கூறியுள்ளார்.
“பத்து ஆண்டுகளுக்கு மேலாக நடித்துக் கொண்டிருந்தாலும் திரையுலகம் குறித்து எனக்கு அதிகம் தெரியாது. இப்போதுதான் பலவற்றைக் கற்று வருகிறேன்.
“மங்கை’ எனக்கு நல்ல முன்னேற்றத்தை தரும் என நம்புகிறேன். எனது கடந்தகால படங்களைப் பார்க்கும்போது நல்ல கதைகளில் நடித்த மனநிறைவு ஏற்படுகிறது,” என்கிறார் ஆனந்தி.

