ரியோவைத் தேடி வரும் புதுப்பட வாய்ப்புகள்

ரியோவைத் தேடி வரும் புதுப்பட வாய்ப்புகள்

1 mins read
6d870219-c26a-4b26-9474-2304aa04dbfc
ரியோ. - படம்: ஊடகம்

‘ஜோ’ திரைப்படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பை அடுத்து அப்படத்தின் நாயகன் ரியோவுக்கு பல நல்ல வாய்ப்புகள் தேடி வருகின்றன.

தற்போது ‘ஜோ’ படத்தை தயாரித்த நிறுவனத்தில் மீண்டும் நாயகனாக நடிக்க உள்ளார் ரியோ.

இதையடுத்து ‘திட்டம் இரண்டு’, ‘அடியே’ ஆகிய படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.

மேலும் தெலுங்கு, தமிழ் மொழியில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகும் ஒரு புதிய படத்தில் இரண்டாம் கதாநாயகனாக ரியோவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

குறிப்புச் சொற்கள்