‘ஜெயிலர்’ இரண்டாம் பாகம்: உறுதி செய்த மிர்ணா

1 mins read
932c67fe-a879-4f9d-9fa5-9b68324d1bd7
மிர்ணா மேனன். - படம்: ஊடகம்

‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை அதன் இயக்குநர் நெல்சன் எழுதி வருவதாக நடிகை மிர்ணா மேனன் கூறியுள்ளார்.

‘ஜெயிலர்’ படத்தில் இவர் ரஜினியின் மருமகளாக நடித்திருந்தார்.

அண்மையில் இயக்குநர் நெல்சனை நேரில் சந்தித்தபோது இத்தகவல் தெரிய வந்ததாக மிர்ணா கூறியுள்ளார்.

எனினும் இரண்டாம் பாகத்தில் தமக்கு ஏதேனும் கதாபாத்திரம் உள்ளதா என்பது குறித்து தெரியாது என்றும் இயக்குநர்தான் அதை முடிவு செய்வார் என்றும் தெரிவித்துள்ளார் மிர்ணா.

‘ஜெயிலர்’ படம் ரூ.600 கோடி வசூலித்து சாதனை படைத்தது. அதன் இரண்டாம் பாகம் உருவாகிறது என்ற தகவல் ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

குறிப்புச் சொற்கள்