சீமான் மனைவிக்கு நாம் தமிழர் கட்சியில் பொறுப்பு

சீமான் மனைவிக்கு நாம் தமிழர் கட்சியில் பொறுப்பு

1 mins read
f51c1779-f630-4f9c-82fc-80cca54006db
மனைவி கயல்விழியுடன் சீமான். - படம்: ஊடகம்

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவி கயல்விழிக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அக்கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பில் இருந்து வந்த சந்திரசேகரன் சில மாதங்களுக்கு முன்பு காலமானார்.

இதையடுத்து அப்பதவி கயல்விழிக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அது குறித்து சீமான் இன்னும் முடிவு செய்யவில்லை என்று நாம் தமிழர் கட்சியினர் கூறிவந்தனர்.

இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதிக்கும் சட்ட ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் தென் சென்னை மக்களவைத் தொகுதியின் இரண்டு சட்ட ஆலோசகர்களில் ஒருவராக கயல்விழி அறிவிக்கப்பட்டுள்ளார்.

குடும்ப அரசியலை விமர்சிக்கும் சீமான், தன் மனைவி, மைத்துனருக்கு கட்சியில் முக்கியத்துவம் அளிப்பது ஏன் என்று சமூக ஊடகங்களில் எதிர்த்தரப்பினர் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளனர். அவற்றுக்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் அரசியல் களத்தில் விறுவிறுப்பு கூடியுள்ளது.

குறிப்புச் சொற்கள்