யோகி பாபு நாயகனாக நடிக்கும் புதிய படம் ‘கிணத்த காணோம்’. இயக்குநர் சுரேஷ் செங்கையா இயக்குகிறார்.
இவர் ஏற்கெனவே, ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.
பின்னர் ‘சத்திய சோதனை’ என்கிற படத்தை இயக்கி அதுவும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. அப்படத்தில் பிரேம்ஜி கதை நாயகனாக நடித்திருந்தார்.
இந்நிலையில், தனது மூன்றாவது படைப்பாக, ‘கிணத்த காணோம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் சுரேஷ் செங்கையா.
இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாக உள்ளது.

