ஆகஸ்ட்டில் ‘சூர்யாவின் சாட்டர்டே’

1 mins read
778e9540-c951-438e-83f7-c1f05b80fcbd
‘சூர்யாவின் சாட்டர்டே’  படத்தில் நானி. - படம்: ஊடகம்

நானி நடிக்கும் ‘சூர்யாவின் சாட்டர்டே படம் ஆகஸ்ட் 29ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

‘அண்டே சுந்தரனிகி’ படத்திற்கு பிறகு இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சரிபோதா சனிவாரம்’.

தமிழில் ‘சூர்யாவின் சாட்டர்டே’ என தலைப்பு வைத்துள்ளனர். இதில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டிவிவி என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜெக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார்.

கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு பல கட்டமாக ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நானியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படத்திலிருந்து விளம்பரக் காணொளி ஒன்று எஸ்.ஜே. சூர்யா பின்னணிக் குரலோடு வெளியாகியுள்ளது.

அத்துடன் இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 29ஆம் தேதி திரைக்கு வருகிறது என படம் வெளியாகும் தேதியையும் அறிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்