தனுஷ் இயக்கி, நடித்திருக்கும் ‘ராயன்’ படத்தில் தனுஷுடன் ஐந்தாவது முறையாக பிரகாஷ் ராஜ் இணைந்து நடித்திருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
‘கேப்டன் மில்லர்’ படத்திற்கு பின் தனுஷ் தனது 50வது படமான ‘ராயன்’ படத்தை இயக்கி, நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கடந்த சில நாட்களாக அறிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடித்துள்ள புதிய சுவரொட்டிகள் வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே தனுஷ், பிரகாஷ்ராஜ் இணைந்து ‘திருவிளையாடல் ஆரம்பம்’, ‘வேங்கை’, ‘அசுரன்’, ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். தற்பொழுது ஐந்தாவது முறையாக ‘ராயன்’ படத்திற்காக இவர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

