‘மோசமான படம் மூலம் நேரம், பணத்தை வீணாக்க விரும்பவில்லை’

‘மோசமான படம் மூலம் நேரம், பணத்தை வீணாக்க விரும்பவில்லை’

1 mins read
f70a776a-d08c-4ca1-b816-ebd7f715913e
அல்லு அர்ஜுன். - படம்: ஊடகம்

“மோசமான படம் மூலம் நேரம், பணத்தை வீணாக்க விரும்பவில்லை,” என்று கூறுகிறார் நடிகர் அல்லு அர்ஜுன்.

தெலுங்குப் பட உலகின் பிரபல நடிகர் அல்லு அர்ஜுன். ‘ஆர்யா’, ‘தேசமுடுரு’, ‘சங்கர் தாதா சிந்தாபாத்’, ‘ஆர்யா 2’, ‘வருடு’, ‘வேதம்’, ‘ரேஸ்குர்ராம்’, ‘புஷ்பா’ உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்து உள்ளார்.

இவர் இரண்டு முறை நந்தி விருதுகளைப் பெற்று உள்ளார். திரைப்படங்களில் நடிப்பதோடு, சில விளம்பரங்களிலும் நடித்து உள்ளார். 2007 முதல் நடிக்கத் தொடங்கி 17 ஆண்டுகளாக தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் அல்லு அர்ஜுன் இணையத்தளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “சினிமாவில் சிறந்த நல்ல படங்கள் மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது. மேலும் ஒரு சில மோசமான படத்தால், பார்வையாளர்களின் நேரத்தையும் ஆற்றலையும் பணத்தையும் வீணாக்க விரும்பவில்லை,” என்று பேசியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்