‘வாய்ப்புக் கொடுத்ததற்கு மிக்க நன்றி ’

‘வாய்ப்புக் கொடுத்ததற்கு மிக்க நன்றி ’

1 mins read
8e2c9796-8f89-471b-b28d-fece9fd2c7a5
தம்பி தனுஷ், அண்ணன் செல்வராகவன். - படம்: ஊடகம்

தனுஷ் தன்னுடைய படத்தில் செல்வராகவனுக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி சொல்லி இருக்கிறார் அண்ணன் செல்வராகவன்.

அதுகுறித்து தனுஷ் வெளியிட்டுள்ள பதிவில், “என் வாழ்க்கையில் இது நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. என் இயக்கத்தில் நடிப்பதற்கு நன்றி சார்,” என தனது அண்ணன் செல்வராகவனுக்கு இணையத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

நடிகர் செல்வராகவன், இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மூத்த மகன். தந்தையைப் போலவே மகன் செல்வராகவனும் தமிழ் சினிமாவுக்கு மிக நல்ல படங்களை, வித்தியாசமான கதைகளைத் தந்தவர்.

செல்வராகவன் படங்கள் என்றாலே, அது ஏதாவது ஒரு விதத்தில் ரசிகர்களை பாதிக்கவே செய்யும். அப்படிப்பட்ட படங்களால் மற்ற இயக்குநர்களிடம் இருந்து இவர் வித்தியாசப்பட்டவர்.

தனுஷ் போட்ட பதிவைப் பார்த்த செல்வராகவன் “இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பளித்ததற்கு நன்றி சார்,” என்று தம்பிக்கு பதிவிட்டுள்ளார்.

தனுஷை சினிமாவில் நாயகனாக அறிமுகப்படுத்திய குருவே செல்வராகவன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்