‘இந்தப் பெண்ணுக்காக புகைப்பழக்கத்தை கைவிட்டேன்’

1 mins read
ab71de79-8d69-4541-bb3d-c985fc085f1e
ஷாகித் கபூர் - படம்: ஊடகம்

புகைபழக்கத்தை கைவிட்டது, இந்த பெண்ணுக்காக, என்று தன் பெண்ணைக் காட்டிக் கூறியுள்ளார் நடிகர் ஷாகித் கபூர்.

பிரபல இந்தி நடிகர் ஷாஹித் கபூர் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தியது குறித்து மனம் திறந்து பேசினார்.

அதில் “நான் எப்போதும் எனது அழகான மகளுக்குத் தெரியாமல் மறைந்திருந்தே புகைபிடிப்பேன். இதுவே அப்பழக்கத்தை நான் கைவிட முக்கிய காரணமாக இருந்தது.

“ஒருமுறை மகளுக்குத் தெரியாமல் புகைபிடிக்கும் போது எவ்வளவு நாள் இப்படியே இருப்போம். இனி வாழ்க்கையில் சிகரெட்டை தொடவே கூடாது என முடிவு செய்து புகை பழக்கத்தை கைவிட்டேன்,” என்று கூறினார்.

ஷாஹித் கபூர் 2015ல் மீரா ராஜ்புத் என்பவரை மணந்தார். இவர்களுக்கு 7 வயது மிஷாவும் இரண்டு வயது ஜைன் என்ற 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்