முன்னணி நட்சத்திரங்களுடன் பிரபாஸ் நடித்து வரும் ‘கல்கி 2898 ஏடி’ 9 பாகங்களாக வெளிவர இருக்கிறது என்று இணையத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இயக்குநர் சங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து முடித்ததும் பிரபாஸ் நாயகனாக நடித்துள்ள ‘கல்கி 2898 ஏடி’ என்ற படத்தில் வில்லனாக நடித்து முடித்திருக்கிறார் கமல்ஹாசன்.
இந்தப் படம் வருகிற மே மாதம் ஒன்பதாம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் பிரபாஸ், கமலுடன் அமிதாப்பச்சன், தீபிகா படுகோன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
பான் இந்திய படமாக தயாராகியுள்ள இப்படம் உலக அளவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் ஹாலிவுட் திரைப்படங்கள் 10 பாகங்கள் வரை திரைக்கு வருவதுபோல் தற்போது இந்த ‘கல்கி 2898 ஏடி’ படத்தையும் 9 பாகங்கள் வரை தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாக இணையத்தளத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது. இருந்தாலும் இந்தத் தகவலை படக்குழு உறுதிப்படுத்தவில்லை.

