‘பொன்னியின் செல்வன்’ ஜோடி மீண்டும் இணைகிறது

1 mins read
e95dd4b3-eab7-436d-812b-ef3e62d44678
சாரா, சந்தோஷ். - படம்: ஊடகம்

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்தவரும் இளவயது நந்தினியாக நடித்த சாராவும் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்கள்.

நந்தினியாக ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்த சாராவிற்கு நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அந்தப் படத்தை சனா மரியன் என்பவர் இயக்க உள்ளார். இவர் தமிழில் ‘12பி’, ‘உள்ளம் கேட்குமே’, ‘தாம் தூம்’, ‘உன்னாலே உன்னாலே’ போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த மறைந்த இயக்குநர் ஜீவாவின் மகள். இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தில் சாராவுக்கு ஜோடியாக சந்தோஷ் என்பவர் நடிக்க உள்ளார். அவர் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஆதித்த கரிகாலனின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்தவர்.

அந்தப் படத்தில் இவர்களுக்கு இடையேயான காதல் காட்சிகள் நன்றாக இருந்ததால் அவர்களை வைத்தே படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளாராம் இயக்குநர் சனா மரியன்.

குறிப்புச் சொற்கள்