தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இயக்குநர் கோரிக்கை: குரலை மாற்றிக்கொண்ட சூரி

1 mins read
75193ec2-e8ae-4577-a014-1fa5ba48c1cd
சூரி. - படம்: ஊடகம்

‘கொட்டுக்காளி’ படத்தில் மாறுபட்ட கதாபாத்திரம் அமைந்துள்ளது என்றும் தமது நடிப்பை வித்தியாசப்படுத்தி காட்டுவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது என்றும் நடிகர் சூரி கூறியுள்ளார்.

“இப்படத்துக்கான பின்னணி இசை, குரல் சேர்ப்பு பணி நடைபெற்றபோது, சூரியின் குரல் கரகரப்பாக இருந்தால் பொருத்தமாக இருக்கும் என்றாராம் இயக்குநர். இதையடுத்து ஒரு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, சில நாட்டு மருந்துகளை உட்கொண்டாராம் சூரி.

“அதன் பிறகு என் குரல் கரகரப்பாக மாறியது. அதனால் இயக்குநருக்கு மிகுந்த மனநிறைவு ஏற்பட்டது,”என்கிறார் சூரி.

குறிப்புச் சொற்கள்