நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களை இயக்க விரும்புவதாகச் சொல்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
மேலும், தாமே அப்படத்தை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அஜித் நடித்த ‘வாலி’ படத்தில் இயக்குநராக அறிமுகமான எஸ்.ஜே. சூர்யா, பின்னர் விஜய் நடித்த ‘குஷி’ படத்தை இயக்கினார்.
பிறகு சில படங்களில் நாயக னாக நடித்து அவற்றை இயக்கியதுடன், தயாரிப்பாளராகவும் மாறினார்.
இப்போது நடிகராகவும் முத்திரை பதித்து வருகிறார். எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்புக்கு என தனி ரசிகர் கூட்டம் உள்ளது.
இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு படத்தை தயாரித்து, இயக்கி, நடிக்க விரும்புகி றாராம். இது திகிலும் அடிதடி மோதல்களும் நிறைந்த படமாக இருக்குமாம்.
“கதைப்படி கார் ஒன்றை முக்கிய கதாபாத்திரமாகவே சித்திரித்துள்ளார்.
அந்தக் கார்தான் குற்றவாளி என்று மற்ற பாத்திரங்கள் சந்தேகப்படும் அளவுக்கு ஒவ்வொரு காட்சியும் திகிலாக நகருமாம்.
தொடர்புடைய செய்திகள்
படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

