அஜித்துடன் நடித்த ‘பில்லா’ படத்தில்தான் தாம் முதன் முறையாக கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்ததாக நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.
அந்தப் படம்தான் தன்னுடைய வேறொரு பரிமாணத்தை திரையில் வெளிப்படுத்தியதாக அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அந்தப் படத்தை நான் என்றுமே மறக்க மாட்டேன். ஏனெனில் இந்தப் படம் எனது திரைப் பயணத்தை மாற்றி அமைத்தது என்று சொல்லலாம். அதுவரை கிராமத்துக் கதாபாத்திரங்களில்தான் அதிகம் நடித்து வந்தேன். என்னால் கவர்ச்சியாகவும் நடிக்க முடியும் என்று ‘பில்லா’ படம் நிரூபித்தது,” என்று நயன்தாரா கூறியுள்ளார்.

