கௌதம் மேனன் இயக்கிய ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் அறிமுகமானவர் சமந்தா. அந்தப் படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்த சமந்தாவை, அப்படத்தின் தெலுங்குப் பதிப்பில் நாயகியாக நடிக்க வைத்தார் கௌதம் மேனன்.
இந்நிலையில், ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படம் வெளியாகி 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள சூழலில், சமந்தாவின் ரசிகர்கள் பலரும் தங்களின் அன்பான பாராட்டுகளைச் சமூக ஊடகங்கள் வழி தெரிவித்து வருகின்றனர்.
விஜய் சேதுபதியின் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடித்திருந்த நடிகை நயன்தாராவும் இன்ஸ்டகிராம் பக்கத்தில் தனது அன்பை வாழ்த்துகளாகப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதில், “14 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கு வாழ்த்துகள். நீங்கள் வலிமையான பெண் சாம். நீங்கள் (சமந்தா) இன்னும் அதிக ஆற்றலைப் பெறவேண்டும்,” என சமந்தாவின் புகைப்படத்தைப் பகிர்ந்து வாழ்த்தியுள்ளார்.
அதற்கு, “நன்றி என் அழகிய நயன்தாராவே” என பதில் கொடுத்திருக்கிறார் சமந்தா.

