சென்னையில் உள்ள பள்ளிவாசலுக்கு தனது விலையுயர்ந்த சொகுசுக் காரில் சென்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், பின்னர் ஆட்டோவில் வீடு திரும்பினார்.
சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அப்பள்ளி வாசலில் ஒவ்வோர் ஆண்டும் சந்தனக்கூடு திருவிழா நடப்பது வழக்கம்.
அதில் பங்கேற்க வந்த ரகுமான், ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டார். சில நிமிடங்களுக்குப் பின் அங்கிருந்து வெளியேறிய அவரால் தனது கார் எங்கு இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கூட்டம் அதிகரித்ததால் அங்கிருந்த ஓர் ஆட்டோவில் ஏறி வீடு திரும்பினார்.
அப்போது எடுக்கப்பட்ட படம் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

