மீண்டும் இணைந்து நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா, பிரியா

மீண்டும் இணைந்து நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா, பிரியா

1 mins read
6cc8fe64-982b-4e64-a35e-640537f5e98e
எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர். - படம்: ஊடகம்

‘மான்ஸ்டர்’, ‘பொம்மை’ ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து, எஸ்.ஜே.சூர்யாவும் பிரியா பவானி சங்கரும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர்.

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் உருவாகும் ‘கில்லர்’ என்ற திகில் படத்தில், பிரியாவை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கெனவே பிரியா பவானியுடன் இணைந்து நடித்திருப்பதால் புதிய படத்தை வேகமாக உருவாக்க முடியும் என எஸ்.ஜே.சூர்யா நம்புகிறாராம்.

இந்தப் படத்தில் கார் ஒன்றை கதாபாத்திரமாகவே சித்திரிக்க சூர்யா முடிவு செய்திருப்பதாக முன்பே ஒரு தகவல் வெளியானது.

இந்நிலையில், இப்படக்குழுவினர் வெளிநாட்டில் இருந்து ஒரு சொகுசுக் காரை இறக்குமதி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்