மாரி இயக்கத்தில் துருவ்: மார்ச் 15ல் தொடங்கும் படப்பிடிப்பு

மாரி இயக்கத்தில் துருவ்: மார்ச் 15ல் தொடங்கும் படப்பிடிப்பு

1 mins read
eb782867-d473-4c7d-a63e-293acf3f38ad
துருவ் விக்ரம். - படம்: ஊடகம்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மார்ச் 15ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்க உள்ளார்.

‘கர்ணன்’, ‘மாமன்னன்’ ஆகிய படங்களுக்கு முன்பே கபடி விளையாட்டை மையப்படுத்தி ஒரு படத்தை இயக்க இருந்தாராம் மாரி செல்வராஜ். சில காரணங்களால் இப்போதுதான் அதற்கான சூழல் அமைந்துள்ளதாகச் சொல்கிறார்.

இப்படம் தமிழகத்தில் முன்பு பிரபலமாக இருந்த கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாறாக உருவாக்கப்படுகிறது. இதற்காக கடந்த சில மாதங்களாக கபடி பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் துருவ்.

இதையடுத்து மார்ச் 15ஆம் தேதி தூத்துக்குடியில் படப்பிடிப்பைத் தொடங்க உள்ளனர். ஒரே கட்டமாக 90 நாள்களுக்குப் படப்பிடிப்பை நடத்தி அனைத்துக் காட்சிகளையும் படமாக்க இருப்பதாகத் தகவல்.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்