ஐஸ்வர்யா இயக்கும் அடுத்த படத்தின் நாயகன் சித்தார்த்

1 mins read
0727dd5f-ad52-4fe5-a75f-2384f2a74b31
ஐஸ்வர்யா ரஜினி, சித்தார்த். - படங்கள்: ஊடகம்

‘லால் சலாம்’ படத்தை அடுத்து, ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா அடுத்த படத்தை இயக்குவதற்கான பணிகளைத் தொடங்கி உள்ளார்.

இந்தப் புதுப்படத்தில் நடிகர் சித்தார்த் கதாநாயகனாக நடிப்பார் என கூறப்படுகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். தாம் படமாக்க உள்ள கதைக்கு சித்தார்த்தான் நாயகனாக நடிக்க பொருத்தமாக இருப்பார் என ஐஸ்வர்யா கருதுவதாகவும் புதுப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

சித்தார்த் நடிப்பில் அண்மையில் வெளியீடு கண்ட ‘சித்தா’ திரைப்படம் வசூல், விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

குறிப்புச் சொற்கள்