மீண்டும் இணைந்து நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர்

மீண்டும் இணைந்து நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர்

1 mins read
c98bd433-8227-4762-946c-459cdbf8dfef
எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர். - படம்: ஊடகம்

‘மான்ஸ்டர்’, ‘பொம்மை’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, எஸ்.ஜே.சூர்யாவும் பிரியா பவானி சங்கரும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர்.

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் உருவாகும் ‘கில்லர்’ என்ற திகில் படத்தில், பிரியாவை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கெனவே இணைந்து நடித்திருப்பதால் புதிய படத்தை வேகமாக உருவாக்க முடியும் என சூர்யா நம்புகிறாராம்.

இந்தப் படத்தில் கார் ஒன்றை கதாபாத்திரமாகவே சித்திரிக்க சூர்யா முடிவு செய்திருப்பதாக ஒரு தகவல் வெளியானது.

இந்நிலையில், இப்படக்குழுவினர் வெளிநாட்டில் இருந்து ஒரு சொகுசுக் காரை இறக்குமதி செய்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்