முதியவர் ஒருவர் அளித்த சால்வையைத் தூக்கி வீசியதற்காக நடிகர் சிவக்குமார் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காணொளி வெளியிட்டுள்ள அவர், தமக்கு சால்வை அணிவிக்க வந்தவர், தமது 50 ஆண்டுகால நண்பர் கரீம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
காரைக்குடியில் நடைபெற்ற ஒரு நூல் வெளியீட்டு விழாவின்போது இந்த சால்வை சம்பவம் நிகழ்ந்தது.
சால்வையை வீசியெறிந்ததன் மூலம் ஒருவரது அன்பை உதாசீனப்படுத்தியதாக சமூக ஊடகங்களில் ஏராளமானோர் சிவக்குமாருக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், 82 வயதான சிவக்குமார் இந்தச் சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
“எனக்கு சால்வை அணிவிப்பது பிடிக்காது. அது தெரிந்திருந்தும் நண்பர் கரீம் சால்வை கொண்டு வந்தது தவறு என்றாலும் வீசி எறிந்தது என் தவறு.
“எனினும் அதை வீசி எறிந்தது என் தவறுதான். அதற்காக வருத்தப்படுகிறேன்,” என்றும் கூறியுள்ளார்.

