தாம் கர்ப்பமடைந்து இருப்பதாக அறிவித்தார் தீபிகா; ரசிகர்கள் உற்சாகம்

தாம் கர்ப்பமடைந்து இருப்பதாக அறிவித்தார் தீபிகா; ரசிகர்கள் உற்சாகம்

1 mins read
7dbcd474-ac8b-4b02-9e9d-bbbc40231239
வரும் செப்டம்பரில் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தீபிகா படுகோன் கூறியுள்ளார். - படம்: ஏஎஃப்பி

திருமணம் செய்துகொண்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, தீபிகா படுகோன்-ரன்வீர் சிங் பாலிவுட் தம்பதியர் தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து தீபிகா வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், தாம் கர்ப்பமடைந்து இருப்பதாகவும் வரும் செப்டம்பரில் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

அத்தம்பதியர் இந்த அறிவிப்பை வெளியிட்ட சில நிமிடங்களில், அது பரவலானது.

அதைத் தொடர்ந்து பாலிவுட் திரையுலகினர் அத்தம்பதியருக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து கருத்துகளைப் பதிவிட்டனர்.

தீபிகா கர்ப்பமடைந்து இருப்பதாக ஏற்கெனவே ரசிகர்கள் அறிந்திருந்தனர். அதை உறுதிப்படுத்தும் விதமாக இச்செய்தி வெளியாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
கர்ப்பிணிகுழந்தை

தொடர்புடைய செய்திகள்