நடிகர் ‘அடடே’ மனோகர் காலமானார்

நடிகர் ‘அடடே’ மனோகர் காலமானார்

1 mins read
80069e33-8a81-4ce8-a528-88852fc6146e
‘அடடே’ மனோகர். - படம்: ஊடகம்

பழம்பெரும் சின்னத்திரை, திரைப்பட நடிகர் ‘அடடே’ மனோகர் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 82.

முதலில் மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய மனோகர், பின்னர் 35 திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, வடிவேலு, விவேக் உள்ளிட்டோருடன் நகைச்சுவை காட்சிகளில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர்.

தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் இவர் எழுதி, இயக்கிய ‘அடடே மனோகர்’ என்ற தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பின்னர் ‘அடடே மனோகர்’ என்று ரசிகர்கள் அவரை அழைக்கத் தொடங்கிவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்