இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு செல்லும் வீரர்களின் விவரங்களை பிரதமர் நரேந்திரமோடி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அறிவித்தார்.
இந்நிலையில், அவ்வீரர்களில் ஒருவரான பிரசாந்த் பாலகிருஷ்ணன் நடிகை லீனா நாயரை திருமணம் செய்துள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் லீலா.
இவருக்கும் பிரசாந்த் பாலகிருஷ்ணனுக்கும் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதியன்றே பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்ததாகவும், இது பெரியவர்கள் நிச்சயித்த திருமணம் என்றும் லீலா கூறியுள்ளார்.
“ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக எனது கணவரும் உள்ளார். எனவேதான் எங்களுடைய திருமண விவரத்தை வெளியிடாமல் இருந்ததோம். தற்போது பிரதமரே உரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எனவே திருமணத் தகவலைப் பகிர்ந்துள்ளோம்,” என்கிறார் லீனா.
இவர் தமிழில், தனுஷ் நடித்த ‘அனேகன்’, விக்ரம் நடித்த ‘கடாரம் கொண்டான்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.
கடந்த 2004ஆம் ஆண்டு அபிலாஷ்குமார் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு 2013ஆம் ஆண்டில் விவாகரத்து செய்துவிட்டார்.

