உதயநிதி படத்தில் ரகுமான் இசையில் பாடிய ஷ்ருதி

உதயநிதி படத்தில் ரகுமான் இசையில் பாடிய ஷ்ருதி

படம்: ஊடகம்

01 Mar 2024 - 2:31 pm

1 mins read

அமைச்சர் உதயநிதியின் மனைவி கிருத்திகா இயக்கும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் ஒரு பாடலைப் பாடியுள்ளார் கமல் மகள் ஷ்ருதிஹாசன்.

இப்பாடலை பாடலாசிரியர் சினேகன் எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் படம் இது. இத்தகவலை சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார் சினேகன்.

இப்படத்தில் ஜெயம் ரவி நாயகனாகவும் நித்யா மேனன் நாயகியாகவும் நடித்துள்ளனர். யோகி பாபு முக்கிய பாத்திரத்தை ஏற்றுள்ளார்.

ரகுமான் இசையில் தாம் பாடியுள்ள பாடல் நிச்சயம் ரசிகர்களிடம் வரவேற்பு பெறும் என்று நம்புவதாகச் சொல்கிறார் ஷ்ருதிஹாசன்.

குறிப்புச் சொற்கள்
நடிகை