ரஜினியின் மருமகள்: வாய்ப்பைப் பறிகொடுத்த நாயகி

1 mins read
4bde3d1c-6b4a-4739-a166-169489ffeac3
ரஜினி. - படம்: ஊடகம்

நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த வருடம் ஜெயிலர் படம் வெளியாகி, பெரிய அளவில் வசூலைக் குவித்தது.

தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோருக்கு சொகுசு கார்கள் மற்றும் லாபத்தில் பங்கு கொடுக்கும் அளவுக்கு வசூலை வாரிக் குவித்தது ‘ஜெயிலர்’. மேலும், இந்தப் படம் இதுவரை உலக அளவில் 700 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து இருப்பதாகத் தகவல் வெளியானது.

இந்தப் படத்தில் ரஜினியின் மருமகளாக மிர்னா மேனன் என்ற நடிகை நடித்து இருந்தார். அவருக்கு இந்தப் படம் பெரிய அளவு புகழைத் தேடிக் கொடுத்து இருக்கிறது. அடுத்து அவருக்கு பல்வேறு பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.

ரஜினி மருமகளாக நடிக்கும் வாய்ப்பு முதலில் சன் டிவி ‘கயல்’ தொடரின் நாயகி சைத்ரா ரெட்டிக்குத் தான் வந்திருக்கிறது. ஆனால் அவர் தொலைக்காட்சித் தொடரில் நடித்துக்கொண்டே ‘ஜெயிலர்’ படத்திற்கு தேதிகள் ஒதுக்க முடியாத நிலை இருந்ததால் மறுத்துவிட்டாராம்.

அதற்குப் பிறகு தான் அந்தப் பாத்திரத்தில் மிர்னா மேனனை நடிக்க வைத்திருக்கிறார்கள்.

குறிப்புச் சொற்கள்
ரஜினிகாந்த்திரைச்செய்தி