தனுஷ் நடித்த ‘ஆடுகளம்’ படம் மூலமாக தமிழில் அறிமுகம் ஆனவர் டாப்சி.
அதற்குப் பிறகு ‘வந்தான் வென்றான்’, ‘ஆரம்பம்’, ‘காஞ்சனா 2’ உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் அவர் நடித்தார்.
ஏராளமான தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களிலும் டாப்சி நடித்து இருக்கிறார். இன்னும் நடித்து வருகிறார்.
டென்மார்க்கைச் சேர்ந்த பிரபல பாட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போ என்பவருடன் டாப்சி நீண்ட காலமாக காதலில் இருந்து வருகிறார்.
2013ஆம் ஆண்டில் இருந்து அவர்கள் காதலித்து வருவதாக பேட்டியில் கூறி இருக்கின்றனர்.
இந்நிலையில், இந்த மார்ச் மாத இறுதியில் டாப்சியின் திருமணம் ஜெய்ப்பூர் அல்லது உதய்ப்பூரில் நடைபெற இருக்கிறது.
அதில் மணமக்களின் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொள்ள இருக்கின்றனர். திரைத்துறையினருக்குக் கூட அழைப்பு இல்லை எனக் கூறப்படுகிறது.
திருமணம் பற்றி டாப்சியிடம் கேட்டதற்கு, “என் சொந்த வாழ்க்கை பற்றி எந்த விளக்கமும் இதுவரை கொடுத்ததில்லை. இனிமேலும் பேச மாட்டேன்,” என்று பதில் அளித்து இருக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
இவர்களின் திருமணம் சீக்கிய மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.