ஜப்பான் சென்றுள்ள நடிகை ராஷ்மிகாவுக்கு அங்குள்ள ரசிகர்கள் சிறப்பான வரவேற்பை வழங்கி உள்ளனர்.
ரசிகர்களின் அன்பை தம்மால் என்றும் மறக்க இயலாது என அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் நடைபெற்ற அனைத்துலகத் திரைப்பட விழாவில் பங்கேற்க சென்றிருந்தார் ராஷ்மிகா.
அங்கு விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன் அவருக்கு ஜப்பான் ரசிகர்கள் வரிசையில் நின்று வரவேற்பு அளித்துள்ளனர்.
பல ரசிகர்கள் ராஷ்மிகாவின் புகைப்படங்களுடன் வடிவமைக்கப்பட்ட வரவேற்பு அட்டைகளை கைகளில் ஏந்தியும் பூங்கொத்து வழங்கியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஜப்பான் ரசிகர்கள் இந்த அளவுக்கு தன் மீது அன்பு காட்டுவார்கள் எனத் தாம் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார்.
ரசிகர்களை நோக்கி கைகளை அசைத்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகவும் ரசிகர்களுக்கு அவர்கள் கொண்டு வந்த வாழ்த்து அட்டைகளிலேயே தாம் கையெழுத்திட்டு பரிசளித்ததாகவும் ராஷ்மிகா கூறியுள்ளார்.

