லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என அப்படத்தின் நாயகன் கார்த்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அவர், “டில்லி சீக்கிரம் திரும்ப வருவான்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
‘கைதி’ படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த பாத்திரத்தின் பெயர் டில்லி.
“அடுத்த ஆண்டு நாங்கள் படப்பிடிப்பை தொடங்குகிறோம். அதற்குள் இப்போது ஒப்பந்தமாகி உள்ள படங்களை முடித்துவிடுவேன். லோகேஷும் ‘ரஜினி 171’ படத்தை முடித்த கையோடு ‘கைதி 2’ பட வேலைகளைத் தொடங்குவார் என நினைக்கிறேன். சீக்கிரம் வருகிறோம்,” என்று கார்த்தி தெரிவித்துள்ளார்.