தனது குடும்பத்தார் குறித்து சிலர் சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துகளை, பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாக நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, ‘யூ டியூப்’ தளத்தில் இவ்வாறு செயல்படுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
“என்னைப் பற்றியும் எனது தந்தை விஜயகுமாரின் முதல் மனைவி குறித்தும் ‘யூ டியூப்’ சேனல் ஒன்று காணொளிகளை வெளியிட்டுள்ளது.
“இதனால் எனது குடும்பத்தார் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்,” என்று அருண் விஜய் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.