குத்துச்சண்டை வீரர் முகம்மது அலியின் வாழ்க்கை திரைப்படமாகிறது. இதில் கதாநாயகனாக நடிக்க விரும்புவதாக ‘பாகுபலி’ புகழ் ராணா டகுபதி விருப்பம் தெரிவித்துள்ளார்.
இவர் முகம்மது அலியின் தீவிர ரசிகராம். எனவே, இந்தச் சாதனை மூலம் வீரரின் வாழ்க்கை வரலாற்றைக் கடைக்கோடி ரசிகருக்கும் கொண்டு சேர்க்க விரும்புவதாகச் சொல்கிறார் ராணா.
“நான் தீவிர குத்துச்சண்டை ரசிகர். முகம்மது அலி, மைக் டைசனின் போட்டிகளை ஒன்றுவிடாமல் பார்த்திருக்கிறேன். எப்போதுமே குத்துச்சண்டை வீரர்களின் படங்களைக் கொண்டுள்ள ‘டி-சட்டை’களைத்தான் அணிவேன்,” என்கிறார் ராணா.
தற்போது தனது கனவுப்படம் குறித்து, சில இயக்குநர்களிடம் பேசி வருகிறாராம். மிக விரைவில் முகம்மது அலி படம் குறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

