“ப்ளூ ஸ்டார்’ படத்தில் எனது நடிப்பை திரையில் காணும்போது உங்கள் முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சிதான் எனக்கான வெகுமதி,” என்று சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் பாண்டியராஜனின் மகன் பிரித்வி.
அண்மையில் வெளியீடு கண்ட ‘ப்ளூ ஸ்டார்’ படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, பிரித்வி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வசூல் ரீதியில் வெற்றி பெற்றுள்ளது. பிரித்வி நடிப்பைப் பலரும் பாராட்டி உள்ளனர்.
இந்நிலையில், படம் சிறப்பாக இருப்பதாக பாண்டிய ராஜன் பாராட்டியதை அடுத்து, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் பிரித்வி.
“வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு உங்களை நேசிக்கிறேன் அப்பா,” என்று தனது பதிவில் பிரித்வி குறிப்பிட்டுள்ளார்.

