தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விக்ரமுடன் இணைந்த பிரபல மலையாள நடிகர்

1 mins read
0d1b4d2d-c6d6-4662-ad62-943e5dfb64d3
மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. - படம்: ஊடகம்

விக்ரம் நடிக்க இருக்கும் அவரது 62வது படத்தில் அவருடன் பிரபல மலையாள நடிகர் நடிக்க இருப்பதாக அறிவித்து இருக்கின்றது படக்குழு.

விக்ரமின் 62வது படத்தை ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சித்தா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் இயக்குகிறார். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் துவங்கியதாகத் தகவல் வெளியான நிலையில், படத்தில் தேசிய விருது வென்ற மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது.

இதே படத்தில் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்