தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆளப்போறான் தமிழன்

1 mins read
22740970-c48a-4588-b4b5-095a31e114dd
இயக்குநர் அட்லி, நடிகர் விஜய். - படம்: ஊடகம்

நடிகர் விஜய்யை வைத்து ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற பெயரில் படம் எடுப்பேன் என்று இயக்குநர் அட்லி கூறியுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கும் ‘கோட்’ படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விரைவில் மாஸ்கோவில் நடைபெற உள்ளது.

இந்தப் படத்தை முடித்ததும் விஜய்யின் 69வது படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அட்லி, எச்.வினோத், கார்த்திக் சுப்புராஜ், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலரது பெயர்கள் அடிபட்டுக் கொண்டிருக்கிறன.

இந்நேரத்தில் அண்மையில் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த இயக்குநர் அட்லியிடம், “அடுத்து விஜய்யை வைத்து நீங்கள் படம் இயக்கினால் எப்படிப்பட்ட தலைப்பு வைப்பீர்கள்?’ என்று கேட்டதற்கு, “ஆளப்போறான் தமிழன்’ என்று பெயர் வைப்பேன்,’’ எனக் கூறினார்.

இது இணையத்தில் பரவியதையடுத்து விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவது அட்லிதான். அரசியல் கதையில் உருவாகும் அந்தப் படத்தில் விஜய் முதல்வர் வேடத்தில் நடிக்கப் போகிறார் என்ற தகவலை விஜய் ரசிகர்கள் இணையத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி