அம்பானி வீட்டுத் திருமணத்தின் இரண்டாம் நாளில் மூன்று சூப்பர் ஸ்டார்கள் இணைந்து நடனம் ஆடிய காணொளி இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
தொழில் அதிபர் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண விழாவை முன்னிட்டு 2ஆம் நாள் நிகழ்ச்சி குஜராத் ஜாம்நகரில் உள்ள அம்பானி வீட்டில் நடந்தது.
இந்த விழாவில் பாலிவுட் பிரபலங்களின் கலைநிகழ்ச்சியில் ஏராளமான நட்சத்திர நடிகர்கள் பங்கேற்றனர்.
இதில் இந்திப் பட சூப்பர் ஸ்டார்கள் ஷாருக்கான், சல்மான்கான் மற்றும் அமீர்கான் கலந்துகொண்டு ஒரே மேடையில் நடனம் ஆடினார்கள்.
ஆஸ்கார் விருது பெற்ற ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் வரும் ‘நாட்டு நாட்டு’ என்ற பாடலுக்கு நடனம் ஆடினார்கள். வண்ண குர்தா உடையில், 3 கான்கள் ஒரே பாடலுக்கு உற்சாகமாக நடனம் ஆடியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இதுதொடர்பான காணொளிகள் இணையத்தளத்தில் பரவி வருகின்றன.
இந்த நிகழ்ச்சியில் பாஷில்சித்தார்த் மல்ஹோத்ரா, கியாராஅத்வானி, சையில் அலிகான், கரீனா கபூர், மாதுரி தீட்சித், வருண் தவான். அனன்யா பாண்டே, ஆதித்யா ராய், ராணி முகர்ஜி, தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

