மீரா மஹதி இயக்கத்தில் கோடை விடுமுறையில் வெளியிடத் தயாராக இருக்கும் ‘டபுள் டக்கர்’ நகைச்சுவை கலந்த அனிமேஷன் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ளது.
‘டபுள் டக்கர்’ படத்தில் தீரஜ் நாயகனாக நடித்துள்ளார். ஸ்மிருதி வெங்கட் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் கோவை சரளா, எம்எஸ் பாஸ்கர், யாஷிகா ஆனந்த், காளி வெங்கட், கருணாகரன், முனீஸ்காந்த், சுனில் ரெட்டி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ளனர்.
படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். கௌதம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் தற்பொழுது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அனிமேஷன் கதாபாத்திரங்களை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் முதல் சுவரொட்டியை அண்மையில் நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.
சிவகார்த்திகேயன் நடித்திருந்த ‘அயலான்’ படத்தைப் போலவே இந்தப் படமும் ரசிகர்களை வெகுவாகக் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சி தற்போது வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
ஏப்ரல் அல்லது மே மாத கோடை விடுமுறை காலத்தில் படத்தை வெளியிட டபுள் டக்கர் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

