ஆண்ட்ரியா நடித்த ‘கா’ படம் வெளியீடு

1 mins read
b09749ae-cf7f-4b60-a150-b8d7752e5c11
‘கா’ படத்தில் புகைப்படக் கலைஞராக நடித்திருக்கும் ஆண்ட்ரியா. - படம்: ஊடகம்

ஆண்ட்ரியா புகைப்படக் கலைஞராக நடித்திருக்கும் ‘கா’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்து இருக்கிறார்கள்.

இப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆண்ட்ரியா காட்டுக்குள் சென்று பறவைகள், விலங்குகளைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக் கலைஞராக திரில்லான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படம் முழுவதும் காட்டின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் சலீம் ஹவுஸ், புகழ் கமலேஷ், ‘சூப்பர் டீலக்ஸ்’ பட புகழ் நவீன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு அறிவழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுந்தர் சி. பாபு இசையமைத்துள்ளார்.

ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான் மேக்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளார். படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது.

கடந்த 2022ஆம் ஆண்டு ‘கா’ படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியானது. இந்த நிலையில், ‘கா’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ‘கா’ திரைப்படம் இம்மாதம் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்