இசைஞானியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க தனுஷுக்கு ரூ.50 கொடுப்பதாக செய்தி வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர், தனுஷ். இவர், தனது கைவசம் பல படங்களை வைத்துள்ளார். சில நாள்களுக்கு முன்பு அவரது 50வது படத்திற்கு ‘ராயன்’ என பெயர் வைத்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்தப் படம் மட்டுமின்றி இவர் நடிக்கும் மற்றொரு முக்கியமான படம் குறித்த தகவல்களும் அண்மையில் வெளியானது.
ரசிகர்களால் ‘இசைஞானி’ என்று அழைக்கப்படும் இசை ஜாம்பவான், இளையராஜா. இவரது வாழ்க்கை வரலாறு படமாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்தப் படத்தில், இளையராஜா இந்தியாவிற்கே இசைஞானியாக வளர்ந்தது எப்படி என காண்பிக்க உள்ளனர். இதில் இளையராஜாவாக நடிக்க தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
இந்நிலையில் அந்தப் படத்தில் தனுஷ் நடிக்க ஐம்பது கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும் தயாரிப்பு நிறுவனமும் தனுஷ் கேட்ட சம்பளத்தை கொடுக்க தயாராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இணையத்தில் பரவி வருகின்றது. கூடிய விரைவில் இந்தப் படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றில் சிம்பு ஏ.ஆர் ரஹ்மானாகவும் ரஜினி மற்றும் கமல் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.