மூன்று பாகங்களாக உருவாகிறது ராமாயணம்

மூன்று பாகங்களாக உருவாகிறது ராமாயணம்

1 mins read
ea1d51f0-bafa-4bd1-aff4-88e6305662eb
யாஷ், சாய் பல்லவி, ரன்பீர் கபூர் - படம்: ஊடகம்

ராமாயணம் படத்தை இந்திப் பட இயக்குநர் நிதேஷ் திவாரி மூன்று பாகங்களாக எடுக்க இருக்கிறார். அதற்கான வேலைகளை தொடங்கி இருக்கிறது படக்குழு.

ராமாயண கதையை வைத்து பல்வேறு திரைப்படங்கள் ஏற்கெனவே வெளியாகியுள்ளன. தற்பொழுது இந்திப் பட இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், அதிக பொருட் செலவில் ராமாயணக் கதை திரைப்படமாகிறது.

3 பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தில், ரன்பீர் கபூர், ராமராக நடிக்கிறார். சாய்பல்லவி சீதையாக நடிக்கிறார். ராவணனாக யாஷ், அனுமனாக சன்னி தியோல் உட்பட பலர் நடிக்கின்றனர். கைகேயியாக லாரா தத்தா, சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் உருவாகும் இந்தப் படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு, ஏப்ரல் 17ஆம் தேதி ராமநவமி அன்று வெளியாக இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்